171
யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 15 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை , கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊா்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு நிஜாம் பாக்கு கொண்டு சென்ற மாணவனை காவல்துறையினர் கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்
Spread the love