Home இலங்கையாழ்.பல்கலை மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் தாக்குதல்

யாழ்.பல்கலை மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் தாக்குதல்

by admin

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதி வழியாக  நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

முச்சக்கர வண்டி ஒன்றில் மது போதையில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவே மாணவர்களை வழி மறித்து தாக்கி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். 

தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More