கடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை என்பதுடன் அம்மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் இருந்து கடந்த 26.09.2022 அன்று மாலை புறப்பட்டு சென்ற 4 மீனவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்குறித்த மீனவர்கள் காணாமல் சென்ற விடயத்தை சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு மீனவ சங்கத்தினர் கொண்டு வந்திருந்த போதிலும் தேடுதல் நடவடிக்கை மந்த கதியில் இடம்பெற்று வருவதாக காணாமல் போன படகு உரிமையாளரினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கல்முனையை சேர்ந்த எம்.ஐ.எம் மஜிட் (வயது 55), சி.எஸ்.எச்.எம் நிப்றாஸ் (வயது 36 ) , ஏ.பி கபீர் (வயது 50) ,எம்.என். ஹில்மி (வயது 33),ஆகிய மீனவர்களே குறித்த படகில் பயணம் செய்து காணாமல் போய் உள்ளனர்.
இவர்கள் பற்றிய தகவல்களை காவல்துறை கடற்படை உள்ளிட்ட தரப்பினருக்கு மீனவ சங்கம் அறிவித்துள்ளதுடன் மீனவ சங்கங்களும் தனியான தேடுதல் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.