இலங்கையின் கடன் வழங்கும் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைக்கு இணைத் தலைமை வழங்க இலங்கையுடன் ஜப்பான் இன்னும் எவ்வித உடன்பாட்டையும் எட்டவில்லையென, ஜப்பான் அரசாங்கத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடன் வழங்குநர்களுடனான, கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் இலங்கையுடன் இணைத்தலைமை வகிக்க ஜப்பான் உடன்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றில் நேற்று (06.10.22) ஆற்றிய விசேட உரையில் தெரிவித்திருந்தார்.
எனினும், ஜனாதிபதியின் விசேட உரையை அடுத்து வெளியாகியுள்ள இந்த செய்தியின்படி, இந்த விவகாரம் முக்கியமான ஒன்று என்பதால் இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் ஜப்பான் முழுமையாக ஆதரவளிக்கத் தயாராக உள்ளதென அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.