உலகக்கிண்ண கால்பந்து தொடர் எதிா்வரும் நவம்பர் மாதம் கட்டாாில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தாண்டு நடைபெறும் உலகக்கிண்ண கால்பந்து தொடர் தான் தனது கடைசி உலகக் கிண்ணமாக இருக்கும் என அர்ஜென்டினா அணியின் தலைவர் லயனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்
நீண்ட ஆலோசனைக்கு பின் இந்த முடிவை எடுத்துள்ளதாக தொிவித்துள்ள அவா் இந்த உலகக்கிண்ணத் தொடர் எப்படிப் போகப்போகிறது? அதில் நான் எப்படி செயல்பட போகிறேன் என்ற பதற்றம் இருக்கிறது. அதற்காக காத்துக்கொண்டும் இருக்கிறேன் எனத் தொிவித்துள்ளாா்.
கடந்த 2006ம் ஆண்டு முதல் அர்ஜெண்டினா அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள நிலையில் தனது ஓய்வு குறித்து மறைமுகமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது கடைசி போட்டியாக இருக்கும் எனக்கூறியிருப்பதால், உலகக்கிண்ணத் தொடருக்கு பின்னரும் மெஸ்ஸி விளையாடுவார் என்ற போதிலும் அடுத்த உலகக்கிண்ணத் தொடருக்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளது. எனவே இந்த இடைபட்ட காலத்தில் மெஸ்ஸி ஓய்வு பெறுவார் எனக் கருதப்படுகின்றது.
35 வயதாகும் மெஸ்ஸி இன்றும் பல இளம் வீரர்களுக்கு சவால் கொடுக்கும் வகையில் உடற்தகுதியை மேம்படுத்தி வருகிறார். . இதுவரை ஒரு உலகக்கிண்ணத்தினைக் கூட வெல்லாத மெஸ்ஸி இந்த முறை அர்ஜெண்டினாவுக்கு கிண்ணத்தினை வென்று கொடுப்பாரா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்