175
யாழ்ப்பாணம் அரியாலையில் புகையிரதத்துடன் மோதுண்டு, நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வயோதிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கல்வியங்காடு, புதிய செம்மணி வீதியைச் சேர்ந்த போல் தனஞ்சயன் (வயது -78) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.
வியாபார நோக்கமா துவிச்சக்கரவண்டியில் அரியாலையில் ஏவி வீதியில் சென்ற பொழுது பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றது.
வயோதிபருக்கு ஏற்கனவே ஒருகண் பார்வையில்லாமலும் காது கேட்காத நிலையில் கடவையை கடக்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
Spread the love