170
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவிலில் பகுதியை சேர்ந்த குறித்த பெண் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை 3 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் உறவினர் ஒருவர் கடந்த 3ஆம் திகதி ஒரு தொகை ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலையே குறித்த பெண் கைது செய்யப்பட்டார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த ஒரு வார கால பகுதியில் யாழ்ப்பாணத்தில் 6 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love