யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சுவாமி விபுலானந்தர் மற்றும் பாரதியாரின் திருவுருவச்சிலை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலை தென் கையிலை ஆதின குருமுதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் மற்றும் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணணால் திறந்து வைக்கப்பட்டது.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாருடைய திருவுருவ சிலையினை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா மற்றும் யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி றெமிடியசினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தென் கையிலை ஆதின குரு முதல்வர் தவத்திரு அகத்தியார் அடிகளார், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா, யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன் ,மாநகர சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.