Home இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவராக இனங்காட்டி ஏமாற்றிய பெண் தொடர்பில் விசாரணை

வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவராக இனங்காட்டி ஏமாற்றிய பெண் தொடர்பில் விசாரணை

by admin

வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவராக தன்னை இனங்காட்டி   வர்த்தகர்கள் உட்பட பல தரப்பினரை  ஏமாற்றி இலட்சக்கணக்கான  ரூபா பணத்தை மோசடி செய்தார் எனக் கூறப்பட்டு கைது செய்யப்பட்ட பெண் தொடர்பில் கல்முனை தலைமையக காவல்துறையினர்  விரிவான விசாரணைகளை  ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை(9) விசாரணைக்காக கல்முனை தலைமையக காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்ட சந்தேக நபரான பெண் வாக்குமூலம் பெற்றுக்  கொள்ளப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு மோசடி செய்து ஏமாற்றிய இலட்சக்கணக்கான பணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன்  பெருந்தொகை பணத்தை சந்தேக நபருக்கு வழங்கிவர்கள் காவல் நிலையத்திற்கு வருகை தந்து முறைப்பாடு அளிக்குமாறு காவல்துறையினர் கேட்டுள்ளனர்.

சந்தேக நபரின்   ஏமாற்றி மோசடி செய்த பணத்தை எங்கு அனுப்புகின்றார் என்ன நடந்தது என்பது தொடர்பிலும் காவல்துறையினர்  விசாரணைகளில் கவனம் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை இது தொடர்பாக சந்திவெளி ஏறாவூர் கல்முனை உள்ளிட்ட  பல்வேறு காவல்நிலையங்களிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாக கல்முனை தலைமையக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

குறித்த சந்தேக நபர் மட்டக்களப்பு மாவட்டம் வேலூர் பகுதியை சேர்ந்த   29 வயதான திருமணமானவர் என்பதுடன் வங்கி கணக்கின் ஊடாக ஒருவாிடம் தலா 8 இலட்சம் வீதம் அறவிட்டுள்ளதுடன் கடல் வழியாக நியுஸிலாந்து நாட்டிற்கு அனுப்புவதாக கூறியே இம்மோசடியை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைதான சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த ப்படவுள்ளாா்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More