149
காணாமல் ஆக்கப்பட்டோாின் குடும்ப உறவுகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை இரண்டு இலட்சம் ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தொிவித்துள்ளாா்.
இது தொடர்பாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவினல் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது எனவும் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
Spread the love