172
யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து 500 கிலோ வெங்காயம் திருடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் உரும்பிராய் யோகபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே வெங்காயம் திருடப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள தோட்ட பகுதியில் குறித்த வீடு அமைந்துள்ளது , அந்த வீட்டினை வெங்காயம் சேகரித்து வைப்பதற்காக பயன்படுத்தி வந்த நிலையில் வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அங்கு சேகரித்து வைத்திருந்த 500 கிலோ வெங்காயத்தை களவாடி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love