188
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா ரக வாகனம் ஆகியன மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 35 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
பட்டா ரக வாகனத்தை செலுத்திய சாரதி தப்பியோடிய நிலையில், விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.–
Spread the love