157
வாகன உதிரிபாக விற்பனை நிலையம் ஒன்றின் கதவுகளை உடைத்து உட்புகுந்த வன்முறை கும்பல் அங்கிருந்த பொருட்களுக்கு சேதங்களை ஏற்படுத்தி விட்டு , தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது.
யாழ்ப்பாணம் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட ஆறுகால்மடம் லோட்டஸ் வீதியில் உள்ள குறித்த விற்பனை நிலையத்தினுள் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை இரவு உட்புகுந்த வன்முறை கும்பலே விற்பனை நிலையத்தினுள் இருந்த பொருட்களுக்கு சேதம் விளைவித்து தீ வைத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விற்பனை நிலைய உரிமையாளரால் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love