வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் எதிர்வரும் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் கைதடியில் இடம்பெறவுள்ள நடமாடும் சேவையில் வடக்கு மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை உறுப்பினரும், வடமாகாண தனியார் பேருந்து சங்கத்தின் தலைவருமான சி,சிவபரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீண்ட காலமாக வடக்கு மாகாணத்தில் சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துக்கான வருடாந்த வருமான வரி பத்திரத்தினை பெறுவதில் பெரும் இடர்பாடுகளை அதன் உரிமையாளர்கள் எதிர்நோக்கி வருகின்றார்கள்.
எனவே அந்த இடர்பாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக நீண்ட காலமாக நமது சங்கத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் மாபெரும் நடமாடும் சேவை எதிர்வரும் 22 ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் கைதடியில் இடம்பெறவுள்ளது
இந்த நடமாடும் சேவையில் கொழும்பில் சென்று மேற்கொள்ள வேண்டிய அனைத்து செயற்பாடுகளையும் இங்கே ஒரே நாளில் ஓரிடத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பேருந்து உரிமையாளர்களும் தங்களுடைய ஆவணங்கள் அனைத்தையும் கொண்டு வந்து நடமாடும் சேவையில் தங்களுக்குரிய சேவையினை பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்