இந்தோனேசியாவில் திரவ வடிவிலான மருந்துகளை பருகிய சுமார் 100 குழந்தைகள் உயிாிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அங்கு அனைத்து விதமான திரவ மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து பருகிய 66 குழந்தைகள் உயிாிழந்தமை தொடர்பாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது. பிரச்சினைக்குரிய இந்த மருந்துகளை இந்தியாவில் அரியானாவின் சோனிப்பட்டில் உள்ள மெய்டன் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் தற்போது இந்தோனேசியாவில் திரவ வடிவிலான மருந்துகளை பருகிய சுமார் 100 குழந்தைகள் உயிாிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
திரவ வடிவிலான சில மருந்துகளில் கடுமையான சிறுநீரக பாதிப்பினை ஏற்படுத்துகிற நச்சுப் பொருட்களான டைதிலீன் கிளைகால் மற்றும் எத்திலீன் கிளைகால் அதிகளவு இருப்பது இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் . இதன் காரணமாக இந்த ஆண்டில் 99 இளம் குழந்தைகள் இறந்துள்ளன எனவும் இந்தோனேசியா தெரிவித்துள்ளது.