Home இலங்கைவிபத்தில் தாயும் மகனும் பலி

விபத்தில் தாயும் மகனும் பலி

by admin

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் அலவ்வ வலகும்புர பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று டிப்பர் வாகனத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் தாயொருவரும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர். 42 வயதான தாயும் 18 வயதாக அவரது மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனா்.

உயிாிழந்தவா்கள் பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவல்துறையினா்தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த உயிரிழந்த பெண்ணின் கணவரும் மற்றுமொரு மகனும் காயமடைந்து பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அலவ்வ காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More