173
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் இன்றைய தினம் சனிக்கிழமை(22) காலை கடல் மார்க்கமாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.
மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 போ் இவ்வாறு தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் தவித்து வருவதாக கிடைத்த தகவலையடுத்து மரைன் காவல்துறையினர் படகில் சென்று இன்று சனிக்கிழமை (22) காலை மீட்டு தனுஷ்கோடி அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.
Spread the love