171
தமிழகத்தின் கோவை பகுதியிலுள்ள கோவில் ஒன்றிற்கு முன்பாக இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்மூலம் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் தனிப்படை காவவற்துறையினர், அப்சர் காண் என்ற இந்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினரே, அப்சர் காண் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக அந்த நாட்டு காவவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love