174
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் கசிப்பு குகை ஒன்றினை காவற்துறையினர் நேற்றைய தினம் வியாழக்கிழமை முற்றுகையிட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
அவ்விடத்தில் காவற்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 60 லீட்டர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்து உபகரணங்கள் என்பவற்றை மீட்டுள்ளனர்.
இது குறித்து மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்
Spread the love