188
யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடரும் மழை காரணமாக வீடொன்று சேதமடைந்துள்ளது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று வசித்து வந்த வீடொன்றே தொடர் மழை காரணமாக பகுதிகளவில் சேதமடைந்துள்ளது.
குறித்த வீட்டில் வசித்தோர் தற்காலிகமாக அங்கிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்கியுள்ளனர்.
இதேவேளை சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 12 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் தொடர் மழை காரணமாக வீடுகளில் வாசிக்க முடியாத நிலையில் அங்கிருந்து வெளியேறி காக்கை தீவு மீனவர் சங்க கட்டடத்தில் தங்கியுள்ளனர்.
Spread the love