153
யாழ்ப்பாணத்தில் பாணின் விலையை குறைக்க மாட்டோம் என யாழ்.மாவட்ட வெதுப்பாக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் நாட்டின் ஏனைய பகுதிகளில் ஒரு இறாத்தல் பாண் 220 ரூபாய் தொடக்கம் 250 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது.
அதன் போது நாம் இலாப நோக்கம் அற்று 200 ரூபாய்க்கே பாணை விற்பனை செய்து வந்தோம்.
தற்போது பாணை 200 ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்றவர்களே 10 ரூபாய் விலை குறைப்பு செய்துள்ளார்கள்.
அதனால் நாம் 200 ரூபாயில் இருந்து 10 ரூபாய் விலை குறைப்பு செய்ய முடியாது. கோதுமை மாவின் விலை மேலும் குறைவடைந்தால் மாத்திரமே நாம் பாணின் விலையை குறைப்போம் என தெரிவித்தனர்.
Spread the love