181
யாழ்ப்பாணம் சேந்தான்குளம் கடற்கரையை அண்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் ஒரு தொகை கஞ்சா பொதிகள் காணப்படுவதாக இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு விரைந்த இராணுவத்தினரால் , குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட கஞ்சா பொதியினை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இளவாலை காவல்துறையினரிடம் இராணுவத்தினர் பாரப்படுத்தியுள்ளனர்.
Spread the love