177
சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு நீரிழிவு விழிப்புணர்வு நடைபவனியும் மருத்துவ முகாமும் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ் சத்திரத்துச்சந்தியில் காலை 8.00 மணியளவில் ஆரம்பமான நீரிழிவு விழிப்புணர்வு நடைபவணியானது, யாழ் வைத்தியசாலை வீதியூடாக சென்று யாழ் புதிய பஸ் நிலையத்தை அடைந்து, அங்கு விழிப்புணர்வு பிரச்சார உரைகளும், அதனைத்தொடர்ந்து இலவச நீரிழிவு பரிசோதனைகளும், இலவச கண்பரிசோதனைகளும், கண்ணாடி வழங்கல் நிகழ்வும், கலந்து கொள்பவர்களுக்கு இலைக்கஞ்சி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
Spread the love