Home இலங்கை Hackforce-2022 Hackathon இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை யாழில் நடைபெறும்!

Hackforce-2022 Hackathon இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை யாழில் நடைபெறும்!

by admin

Yarl Salesforce Ohana நடாத்தும் Hackforce-2022 Hackathon, எதிர்வரும் 13ம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள North Gate ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தெரிவித்தனர். \

மேலும் தெரிவிக்கையில், 

Salesforce என்பது அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் cloud-based மென்பொருள் நிறுவனமாகும். உலகம் முழுவதும் Salesforce நிறுவனத்திற்காக பல மென்பொருள் பொறியியலாளர்கள் வேலை செய்கிறார்கள். 

அதே போன்று யாழ்ப்பாணத்தில் இருந்து Salesforce நிறுவனத்திற்காக மற்றும் Salesforce சார்ந்த இதர நிறுவனங்களிற்காகவும் வேலை செய்யும் மென்பொருள் பொறியியலாளர்களால் தன்னார்வமாக தொடங்கப்பட்டதே Yarl Salesforce Ohana (YSFO) ஆகும். இவ் அமைப்பானது இலங்கையில் சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். Yarl Salesforce Ohana தொடங்கப்பட்டு இவ்வருடத்துடன் மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், Salesforce மென்பொருள் பொறியியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் என பலதரப்பட்டவர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

மென்பொருள் பொறியியல் துறையில் பல்வேறுபட்ட Languages, கருவிகள் பயன்படுத்தப்படும் நிலையில், இலங்கையின் மென்பொருள் பொறியியலாளர்கள் மற்றும் மென்பொருள் வல்லுனர்களுக்கு உலக சந்தையில் நன் மதிப்பும் அதிக கேள்வியும் உள்ள நிலையில், இந்த Salesforce மென்பொருள் வல்லுநர்களுக்கு மற்றைய Languagesஐ விட அதிக வாய்ப்புகளும் கேள்விகளும் காணப்படுகின்றன. 

இந்த நிலையில் Salesforce தொழில்நுட்பம் பற்றிய அறிவும், தெளிவும் எமது நாட்டில் குறைவாகவே உள்ளது. 

எமது வடக்கு கிழக்கு பகுதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆகவே இந்த தொழில்நுட்பத்தினை பற்றிய தெளிவினையும் அது பற்றிய வாய்ப்புக்களையும் தெரியப்படுத்தி விழிப்புணர்வை எல்லோரிடமும் ஏற்படுத்தும் நோக்குடன் YSFO பல்வேறு செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 

இதன் அடுத்த கட்ட முயற்சியாக தொடங்கப்பட்டதே Hackforce எனப்படும் மென்பொருள் தயாரிப்பு போட்டியாகும். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வருடாந்த போட்டியிலே பங்குபற்றும் அணிகள் Salesforce தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி நிகழ் உலக பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கூடியதான மென்பொருட்களை உருவாக்க வேண்டும். 

இதேபோன்று இந்த வருடமும் Hack force’22 தொடங்கப்பட்டு, கடந்த 2 மாதங்களாக ஆரம்பக்கட்ட சுற்றுகள் நடைபெற்ற நிலையில், இறுதிப் போட்டியானது எதிர்வரும் 13ஆம் திகதி ஞாயிற்று கிழமை, North gate Hotel இல் நடைபெற உள்ளது.

இறுதிப் போட்டியிலே பங்கு பற்றும் 12 தெரிவு செய்யப்பட்ட அணிகள் தமது செயலிகளை பற்றிய விளக்கங்களை வழங்க இருப்பதுடன் நடுவர்கள் அவற்றினை மதிப்பீடு செய்து வெற்றியாளர்களை தெரிவுசெய்ய உள்ளனர். 

அதுமட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து Salesforce வல்லுனர்கள் நிகழ்நிலை மூலமாக இணைந்து Salesforce பற்றிய விளக்கங்களையும், உலக சந்தையில் Salesforce தொழில்நுட்பத்திற்கு உள்ள வாய்ப்புகள் பற்றியும் விளக்கங்களை வழங்க உள்ளனர். 

காலை 8.30 மணி முதல் நடைபெற உள்ள இந்த நிகழ்வில் மதியம் 1 மணியில் இருந்து பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவர்.

இந்த நிகழ்வில் பங்குபற்றுவதன் மூலம், Salesforce பற்றிய பல்வேறுபட்ட விடயங்களை தெரிந்து கொள்ளக் கூடியதாக இருப்பதுடன், மாணவர்களுக்கு இந்த துறையில் இருக்கும் வாய்ப்புகள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். 

தகவல் தொழில்நுட்ப துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கும், இத்துறையினை தமது எதிர்காலமாக கொள்ள எதிர்பார்ப்பவர்களுக்கும், IT வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் முயற்சியில் ஈடுபட விரும்புவர்களுக்கும் இது ஒரு மகத்தான வாய்ப்பு ஆகும். 

இது பற்றிய மேலதிக விபரங்களை YSFOஇன் உத்தியோக பூர்வ இணையத்தளமான yarlsfo.org யிலும், ஏனைய சமூக வலைத்தள பக்கங்களுக்கு செல்வதன் மூலமும் தெரிந்து கொள்ள முடியும். ஆர்வமுள்ளவர்கள் இந்நிகழ்விலே கலந்து கொண்டு உச்சக்கட்ட பயனை பெற்று கொள்ளமுடியும் என்றனர். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More