214
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
இவர் காணாமல் போயிருந்த நிலையில், 10ஆம் திகதி வெலிகந்த திரிகோண கந்த காட்டில் மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
பல நாட்களாக உணவருந்தாமல் இருந்த அவர், பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று (11.11.22) இரவு உயிரிழந்துள்ளார்.
கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் புனர்வாழ்விற்காக கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 31 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
Spread the love