இந்திய பிரத்தியேக பொருளாதார வலயத்துக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் 11 பேர் இந்திய கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வங்காளவிரிகுடாவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கரையோர காவல் படையினர், கலிங்கபட்டினம் கரைக்கு அருகே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
11 மீனவர்களும் மேலதிக விசாரணைகளுக்காக ஆந்திர மாநிலம் காக்கிநாடா கரையோர பாதுகாப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஒப்படைக்கப்பட்ட மீனவர்களிடம் சுங்கம், உளவுப் பிரிவு மற்றும் மீன்பிடித் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன
வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள், இந்திய பிரத்தியேக பொருளாதார வலயத்துக்குள் அத்துமீறி மீன்பிடிப்பது குற்றமாகும் என்பதுடன், அதனூடு பயணிப்பதற்கு அனுமதி பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.