200
கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ மேஜர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து பேர் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த சுவரில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் கல்கமுவ மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்
Spread the love