Home இலங்கைஅதிகாரப் பரவலாக்கத்தையே வழங்குவதே இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பாதுகாப்பு

அதிகாரப் பரவலாக்கத்தையே வழங்குவதே இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பாதுகாப்பு

by admin

 

வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கக்  கூடாதென தெரிவித்துள்ள  முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர  , அதிகாரப் பரவலாக்கத்தை கண்டிப்பாக வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.   நேற்றையதினம் வரவு – செலவு திட்டம் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்  இவ்வாறு   தொிவித்துள்ளாா்.

வடக்கு ,கிழக்கு பிரிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் பிரிவினைவாத கருத்துகள் வளர்ச்சியடையும். இதனால், பூகோளரீதியாக பலமான நாடாக மாற வேண்டும் என்கிற இந்தியாவின் நோக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனத் தொிவித்துள்ள அவா்  இதனாலேயே புலிகளை தோற்கடிக்க இந்திய அமைதிக்காக்கும் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதிலும்  இதில் ஏற்பட்டத் தோல்விகளாலேயே இந்தியா 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது எனவும் தொிவித்துள்ளாா்.

வடக்குக், கிழக்குக்கு  அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால் இலங்கையிலிருந்து அம்மாகாணங்கள் பிரிந்துச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, ஒருபோதும் அதிகாரப் பகிர்வை வழங்கக்கூடாது. மாறாக கண்டிப்பாக அதிகாரப் பரவலாக்கத்தையே வழங்க வேண்டும். இதுவே இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பாதுகாப்பு எனவும் அவா் தெரிவித்துள்ளாா்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More