குவைத்தில் 7 பேருக்கு ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை பல்வேறு குற்றங்களுக்காக இவ்வாறு மத்திய சிறைச்சாலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
குவைத்தைச் சோ்ந்த 03 ஆண்கள், ஒரு பெண், ஒரு சிரியா நாட்டவா், ஒரு பாகிஸ்தானியா், ஒரு எத்தியோப்பிய பெண் என 7பேருக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மனிதா்களின் மிகவும் புனிதமான உரிமையாகிய உயிா்வாழும் உரிமையை அவா்கள் பிறரிடமிருந்து பறித்ததால் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அரசு தரப்பு நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் இது போன்ற கூட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது மிகவும் அபூா்வம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது