ஓமானுக்கு ஆட்களைக் கடத்தும் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. டுபாயிலிருந்து இலங்கைக்கு சென்ற சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வத்தளையைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் மருதானையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகமொன்றை நடத்தி ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
இலங்கையில் இருந்து பெண்களை சுற்றுலா விசாவில் வேலை வாங்கித் தருவதாக அழை்த்துச் சென்று ஓமானில் நடத்தப்படும் பாரிய மனித கடத்தல் தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வு திணைக்களம் அண்மையில் அம்பலப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.