167
மாவீரர் வாரம் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், பருத்தித்துறை நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் பொது ஈகை சுடரினை இரண்டு மாவீரர்களின் பெற்றோர்கள் ஏற்றிவைத்ததை அடுத்து, மாவீர்களுக்கு அக வணக்கம் செலுத்தி, தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
எதிர்வரும் 27 ம் திகதி மாவீரர் நாள் வரையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Spread the love