174
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதுவரை வெளியில் தெரியவராத அரசியல் இரகசியங்கள் அடங்கிய புத்தகமொன்றை எழுதி வருவதாக தெரிவித்துள்ளார். அத்துடன், தான் எழுதியுள்ள புத்தகத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அரசியல் சம்பவங்கள் குறித்து தான் எழுதும் புத்தகத்தில் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன பொதுமக்கள் மத்தியில் சென்றடையாத சில சம்பவங்கள் தான் எழுதும் புத்தகத்தின் மூலம் வெளிவரும் என்றும் கூறியுள்ளார்.
Spread the love