களுத்துறை தெற்கில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வந்த ஆசிரியர் ஒருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஆசிாியாிடருந்து 1,299 மருந்துகளும் கைப்பறப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஆசிாியா் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்கள் தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்துபவர் என தொிவித்துள்ள காவல்துறையினா் இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவா் களுத்துறையில் வாடகை வீடொன்றிவ் வசித்து வந்ததுடன், மாவனெல்லையில் நிரந்தர வதிவிடத்தினை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை தெற்கு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.