இந்தோனேசியாவின் ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகாித்துள்ளதாக அதாிகாாிகள் தொிவித்துள்ளனா்.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – 46 பேர் பலி – 700 பேர் காயம்
இந்தோனேசியாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தினால் 46 பேர் உயிரிழந்துள்ளதுடன் 700 பேர் காயமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூர் நகருக்கடியில் 10 கிமீ ஆழத்தில் 5.6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும் நிலநடுக்கத்தை அடுத்து, பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
இடிந்து விழுந்த கட்டடங்களில் இருந்து மக்களை வெளியேற்ற மீட்புக்குழுவினர் முயற்சித்து வருவதாகவும் அங்கு உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனத் தொிவித்துள்ள அதிகாாிகள் மேலும் நிலநடுக்கம் ஏற்படலாம் என எச்சரித்துள்ளனர்.
இதேவேளை இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் கிடையாதென இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளாா்.