203
யாழ்ப்பாணம் சுன்னாகம் மாசியப்பிட்டி பகுதியில் இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தொலைபேசி வயர்கள் மற்றும் தனியார் தொலைகாட்சி நிறுவனம் ஒன்றின் ‘கேபிள் ரிவி’ வயர்கள் என்பன விஷமிகளால் வெட்டி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
சுன்னாகம் மாசியப்பிட்டி வீதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு குறிப்பிட்ட சில இடங்களில் விஷமிகள் வயர்களை வெட்டி சேதப்படுத்தி உள்ளனர். அதனால் சுமார் 200 மீற்றர் நீளமான இணைப்பு வயர்கள் சேதமடைந்துள்ளன. சேதமாக்கப்பட்ட வயர்கள் தற்போது சீர் செய்யப்பட்டு , சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.
சம்பவம் தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளது. முறைப்பட்டின் பிரகாரம் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love