194
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
கொடிகாமம் துயிலும் இல்லம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி!
யாழ்ப்பாணம் கொடிகாமம் துயிலும் இல்லத்தின் முன்பாக மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
கொடிகாமம் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்டு , தற்போது இராணுவத்தினரின் 522 ஆவது பிரிகேட் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெல்லியடியில் கரும்புலி மில்லரின் நினைவிடத்தில் அஞ்சலி!
யாழ்ப்பாணம் நெல்லியடியில் உள்ள முதல் கரும்புலி மில்லரின் நினைவிடத்தில், மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் முன் அஞ்சலி!
யாழ்ப்பாணம் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினை இடித்து அழித்த இராணுவத்தினர் தற்போது அவ்விடத்தில், 551ஆவது படைப்பிரிவின் முகாமை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love