யாழ்ப்பாணம் வடமாராட்சி எள்ளாங்குளம் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வருவோரை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் மற்றும் காவற்துறையினர் ஈடுபட்டனர்.
மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எள்ளாங்குளம் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதன்போது இராணுவ முகாமில் இருந்து இராணுவத்தினர் மற்றும் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த காவற்துறையினர் அங்கு வருவோரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். அதேவேளை ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.
அச்சுறுத்தல்களை மீறியும் அங்கு உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினை இடித்து அழித்த இராணுவத்தினர் தற்போது அவ்விடத்தில், 551ஆவது படைப்பிரிவின் முகாமை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.