160
“தாய் நிலம்” எனும் ஆவண படத்தினை தமிழ் மக்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி, விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ் மக்களின் தாயகமான வடக்கு-கிழக்கில் காலம் காலமாக அரசாங்கங்கள் மேற்கொண்டுவரும் நில அபகரிப்பை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும் ‘தாய்நிலம்: நில அபகரிப்பு – இலங்கை வாழ் தமிழ் மக்களின் உண்மையான பெருந்தொற்று ( ThaaiNilam: Land Grabbing – The Real Pandemic for the Tamils in Sri Lanka) என்ற ஆவண படம் வெளியிடபட்டுள்ளது.
வரலாற்று ரீதியாக தமிழ் மக்களின் காணிகள் எவ்வாறு அபகரிக்கப்பட்டன என்பது பற்றியும் தமிழர் தாயகத்தின் இன்றைய நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்பது பற்றியும் இந்த ஆவணப்படம் விளக்குகின்றது. தமிழ் மக்கள் அனைவரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய ஒரு ஆவண படம் இதுவாகும். இந்த ஆவணப் படம் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டிருக்கின்ற போதிலு ம் தமிழ் மொழியில் கணிசமான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆவண படத்தை அவசியம் பாருங்கள் என கோரியுள்ளார்.
Spread the love