இத்தாலியில் நடந்த நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிாிழந்துள்ளனா். அங்குள்ள சிறந்த சுற்றுலா தளமாக திகழ்ழும் முற்றிலும் மலைபாங்கான இச்சியாதீவுக்கு தினமும் அதிகளவான சுற்றுலா பயணிகள் செல்வது வழமை. . இந்த தீவில் சில நாட்களாக கனமழை பெய்து வருகின்ற நிலையில் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் திரண்டிருந்தனா்.
இந்த நிலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதில் பிறந்த குழந்தை, 2 சிறுமிகள் உள்பட 7 பேர் உயிாிழந்துள்ளனர். 5 பேரை காணவில்லை, அங்கு தொடர்ந்து மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் காணாமல் போனவா்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.
அதேவேளை கமரூன் நாட்டுத் தலைநகர் யவுண்டேயில் 20 மீட்டர் உயரமுள்ள அணைகட்டுப் பகுதியின் அடிவாரத்தில் உள்ள மைதானத்தில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது . ஏற்பட்ட நிலச்சரிவுில் சிக்கி குறைந்தது 14 பேர் உயிரிழந்ததாக தொிவிக்கப்பட்டுள்ளது. . மீட்பு படையினரின் உதவியுடன் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
யவுண்டே கனமழை காரணமாக இந்த ஆண்டு பல பேரழிவை சந்தித்துள்ளது வெள்ளத்தால் அந்த பகுதியின் உட்கட்டமைப்பு சிதைந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது