160
பொன்னாலையில் Musalpetti Wind Power (PVT) Ltd நிறுவனத்தினரால் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் திங்கட்கிழமை வலி. மேற்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. பொன்னாலை தொடக்கம் அராலி வரையான கடற்கரையோரத்தில் 15 காற்றாலைக் கோபுரங்களை அமைப்பதற்கு மேற்படி நிறுவனத்தினால் இடங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
இக்கோபுரங்களை அமைப்பதில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் தொடர்பாக சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டுவதற்காக இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் கலந்துகொண்டிருந்த துறைசார்ந்த அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் இக்போபுரங்களின் சாதக, பாதக அம்சங்கள் தொடர்பாக கேள்விகளை எழுப்பியிருந்தனர். குறித்த நிறுவன உத்தியோகத்தர்கள் அதற்குரிய பதில்களை வழங்கினர். இதன்போது, இடத்தெரிவு தொடர்பாக கிராமமட்டத்தில் பொதுமக்களுடன் கலந்துரையாடி இறுதி முடிவு எடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத திட்டங்களாயின் அதனை செயற்படுத்த முடியும் என இங்கு கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகளும் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தெரிவித்தனர்.இக்கலந்துரையாடலில் வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் த.நடனேந்திரன் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
Spread the love