183
யாழ்ப்பாணத்தில் சாரதி பயிற்சி பெற வந்த பெண்ணின் கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய பகுதியில் சாரதி பயிற்சி பெற வந்த பெண்ணொருவரின் கைப்பை மற்றும் 65ஆயிரம் ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பன கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருடப்பட்டிருந்தது.
அது தொடர்பில் யாழ்ப்பாணம் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
முனியப்பர் ஆலய பகுதியில் சாரதி பயிற்சி பெற வரும் பெண்களை இலக்கு வைத்து திருட்டு கும்பல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது.பெண்கள் தமது மோட்டார் சைக்கிள் இருக்கைக்கு கீழ் தமது உடமைகளை வைத்து விட்டு செல்வதனை அவதானிக்கும் கும்பல் அவற்றை திருடி வருகிறது. எனவே தமது உடைமைகள் தொடர்பில் கவனமாக இருக்குமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.
Spread the love