197
யாழ் போதனா வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 11 மாதங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளது. காரைநகர் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் ஜீவிதா என்ற 11 மாத குழந்தைக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீர் சுகவீனம் ஏற்பட்டமையால், காரைநகர் வலந்தலை வைத்திய சாலையில் பெற்றோர் அனுமதித்தனர்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு குழந்தை மாற்றப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது
Spread the love