176
யாழ்ப்பாணம் மாநகர சபை தமது சபை எல்லைக்குள் கழிவுகளை கொட்டுவதனை நிறுத்த வேண்டும் என கோரி மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் அப்பகுதி மக்களுடன் இணைந்து இன்றைய தினம் புதன்கிழமை வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குள் இருக்கும் கல்லுண்டாய் பிரதேசத்தில் கழிவுகளை கொட்டி வருகிறது. அதனால் அந்த பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் , அப்பகுதி மக்களுடன் இணைந்து மாநகர சபை தமது எல்லைக்குள் கழிவுகளை கொட்டக்கூடாது என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர் .
Spread the love