இதையடுத்து, புதைகுழி மீதான அகழ்வுப் பணிகள் தொடர்பில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி அறிவிக்க காவல்துறையினருக்கு நீதவானால் உத்தரவிடப்பட்டது.
இதனிடையே, ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் என்பன இதுவரை நீதிமன்றத்தில் கை அளிக்கப்படவில்லை என்பதால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
அத்துடன், இது தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மையினால், அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். இந்த விடயங்களை கவனத்தில் கொண்ட நீதவான் இதற்கான நடவடிக்கைகள் வெகுவிரைவில் முன்னெடுக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணைகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.