ஆப்கானிஸ்தானின் வடக்கு சமங்கன் மாகாணத்தில் அய்பக் எனும் நகரில் அமைந்துள்ள மதரசா பள்ளியில் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது மேற்கொள்ளபட்ட குண்டுவெடிப்பில் 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். . உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
. குறித்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் உாிமை கோரவில்லை . கடந்த 2021ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதன் பின்னா் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு மசூதிகள், மக்கள் கூடும் சந்தைப் பகுிகளை இலக்கு வைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.