212
யாழ்ப்பாணம் வரணி குடம்பியன் குளத்தில் நீராட சென்றவர் இரண்டு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அப்பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மணிவண்ணன் (வயது 37) என்பவரே மீட்கப்பட்டுள்ளார்.குறித்த நபர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர், குளத்தில் நீராட சென்ற நிலையில் காணமால் போயிருந்தார்.அவரை இரண்டு நாட்களாக குடும்பத்தினர் , ஊரவர்கள் தேடி வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
Spread the love