250
வடையினுள் கரப்பான் பூச்சி காணப்பட்டமையால் , வடையினை விற்பனை செய்த உணவகத்திற்கு எதிராக யாழ்.மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.
யாழ்.நகர் பகுதியை அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நபர் ஒருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உழுந்து வடை ஒன்றினை வாங்கி சாப்பிட முற்பட்ட வேளை வடையினுள் கரப்பான் பூச்சி ஒன்று காணப்பட்டுள்ளது.
அது தொடர்பில் குறித்த நபர் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவித்ததை அடுத்து , அங்கு உடனடியாக சென்ற சுகாதார பரிசோதகர் கடையில் மேலதிக சோதனைகளை நடத்தியதுடன் , வடையினுள் கரப்பான் பூச்சி காணப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முகமாக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
Spread the love