Home இலங்கைவீதியில் கேக் வெட்டி சட்டவைத்திய அதிகாரிக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்தில் 10 பேர் கைது

வீதியில் கேக் வெட்டி சட்டவைத்திய அதிகாரிக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்தில் 10 பேர் கைது

by admin

தெல்லிப்பளை வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்து, வீதியில் கேக் வெட்டிய குற்றச்சாட்டில் 10 இளைஞர்களை கோப்பாய்  காவல்துறையினா்  கைது செய்துள்ளனர்.  குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கோப்பாய் பகுதியில் வசிக்கும் குறித்த சட்ட வைத்திய அதிகாரி தனது கடமையின் நிமித்தம் நேற்றைய தினம் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்த வேளை , கோப்பாய் நாவலர் பாடசாலை முன்பாக வீதியை மறித்து மோட்டார் சைக்கிளில் நின்ற இளைஞர்கள் குழுவொன்று பிறந்தநாள் தினத்தினை கொண்டாடிய வண்ணம் இருந்துள்ளனர்.
இளைஞர்கள் குழுவின் பிறந்தநாள் கொண்டாடத்தினால் , அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு இருந்தது. அதனால் சட்ட வைத்திய அதிகாரி தனது கடமைக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்ட்டமையால் , அது தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 10 இளைஞர்களை கைது செய்ததுடன் , அங்கு நின்ற இரண்டு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களை கோப்பாய் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More