211
யாழ்ப்பாண கடற்பரப்பில் சட்டவிரோத மீன் பிடி முறைமையில் மீன் பிடித்தமை மற்றும் கடலட்டை பிடித்தமை ஆகிய குற்றச்சாட்டில் இரு மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டள்ளனர்.
குருநகர் மற்றும் வெற்றிலைக்கேணி பகுதிகளை சேர்ந்த இரு மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களிடம் இருந்து, சான்று பொருட்களாக மீட்கப்பட்ட தங்கூசி வலைகள் மற்றும் கடலட்டைகள் என்பவற்றையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறையினரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
Spread the love