பிரித்தானியாவின் பிரபுக்கள் சபையில் கொன்ஸவேற்றிவ் (Conservative) கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரான பரோனஸ் மோன் (Baroness Mone) குறித்த குற்றச்சாட்டுகளைப் படித்து, தான் அதிர்ச்சியடைந்ததாக பிரதமர் ரிஷி சுனக், தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் இனி பிரபுக்கள் சபையில் கலந்து கொள்ளப்போவதில்லை என்பது முற்றிலும் சரியானது எனவும் கூறியுள்ளார்.
கொவிட் காலத்தில் மருத்துவ பொருட்களை வாங்குவதற்கு மேற்கொண்ட ஒப்பந்தம் ஒன்றில் பரோனஸ் மோனின் சிபாரிசு இருந்ததாக தொழிற்கட்சியினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பின் பரோஸ் மோன் (Baroness Mone) பிரபுக்கள் சபையில் இருந்து விடுவிப்பில் சென்றுள்ளார்.
குறிப்பாக பிரித்தானிய அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு அவர் பரிந்துரைத்த பிபிஇ மெட்ப்ரோவுடன் (PE Medpro) பரோஸ் மோனிற்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக கொவிட்காலத்தில் முகமூடிகள் மற்றும் மருத்துவ கவுன்களை வழங்குவதற்காக 203 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள அரசாங்க ஒப்பந்தங்களை பெறுவதற்கு அவர் அமைச்சர்களுக்கு பரிந்துரைத்ததாகவும் அந்த நிறுவனத்தில் இருந்து அவர் பயனடைந்ததாகக் கூறப்படுவதால், தமது கட்சியைச் சார்ந்தவர் விடுவிப்பு எடுப்பதனை பிரதமர் ரிசி சுனக் ஏற்றுக்கொண்டுள்ளார். அத்துடன் இந்த விடயத்தில் கொண்சவேட்டிக் கட்சியின் பழமைவாத செயற்பாடுகளை தான் பின்பற்றப்போவதில்லை எனவும் குறிப்பட்டுள்ளார்.
இதேவேளை பரோஸ் மோனின் (Baroness Mone) சட்டக் குழு இந்த குற்றசாட்டுக்கள் குறித்து கையாளுவதாக அவரது செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
மேலும் கார்டியனில் நடத்தப்பட்ட விசாரணையில், பரோஸ் மோன் (Baroness Mone) ஒப்பந்த நிறுவனத்திடம் இருந்து நிதி ரீதியாக பயனடைந்ததாகக் கூறப்படும் ஆவண தகவல்கள் கசிந்த நிலையிலேயே பிரபுக்கள் சபையில் இருந்து விடுவிப்பு எடுக்கும் நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பரோனஸ் மோனின் வங்கிக் கணக்கில், வரி செலுத்துவோரின் ஏறக்குறைய £30 மில்லியன் புவுண்ட் பணம் எப்படி வந்தது என தொழிற்கட்சியின் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் சுனக், பரோஸ் மோன் ஒரு வழக்கறிஞர், இவ்வாறான குற்றச்சாட்டுகள் வரும்போது ஒரு செயல்முறை உள்ளது என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும். அந்த செயல்முறை முடிவடையும் வரை அவரது விடுவிப்பு சரியானது. அது உடனடியாக தீர்க்கப்படும் என நம்பவதாக குறிப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பிரபுக்கள் சபையின் தரநிலை கண்காணிப்பு நிறுவனம் PPE மெட்ப்ரோவுக்கான ஒப்பந்தங்களை வாங்குவதில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஈடுபாட்டின் பேரில் தமது சகாவை விசாரித்து வரும் நிலையில் இந்த விடயம் ஒரு குற்றவியல் விசாரணையின் ஒரு பகுதியாக காவல்துறை அல்லது வேறு முகவர் நிறுவனத்தால் விசாரணைக்கு உட்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் PPE Medpro நிறுவனத்திற்கு ஒப்பந்தங்கள் வழங்கியது தொடர்பான ஆவணங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளியிட அரசாங்கம் உறுதியளித்துள்ளது.